ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
பல்லவி
மாயாமாளவகௌளையில் மனம் மயங்கும்
மாயே ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
ஓயாது துதித்திடும் பக்தரைக்காக்கும்
தாயே நீயே துணை கருணைக்கடலே
சரணம்
பாசாங்குசமும் கரும்பு வில்லும்
தேசுடன் கரங்களில் ஏந்திக்காட்சிதரும்
மாசற்றதேவி கேசவன் சோதரி
நேசமுடன் பணிந்தேன் எனைக்காத்தருள்வாய்
No comments:
Post a Comment