அனந்தனே கேசவா
பல்லவி
தினமுனைத் துதித்திட வரம் தருவாய்
தீனசரண்யனே பத்மநாபா
அனுபல்லவி
கனவிலும் நினைவிலும் உன்னிரு திருவடி
மனத்தினில் மறவாமல் நினைத்திட அருள்செய்து
சரணம்
தனக்கென எனக்கொரு பொருளுமில்லை
மனக்குறை எனக்கதனால் ஏதுமில்லை
எனதுயிருடலனைத்தும் உனதன்றோ
அனந்தனே கேசவா சரணடைந்தேன்
No comments:
Post a Comment