ஶ்ரீமாதவா
பல்லவி
ஶ்ரீமாதவா மதுசூதனா
பாமாருக்மிணி மனம் மகிழ உடனிருக்கும்
அனுபல்லவி
காமாதி அறுபகையகன்றிட வேண்டியே
மாமாயன் கேசவனுன் மலரடி பணிந்தேன்
சரணம்
நன்றும் தீதும் நானறிந்தவனில்லை
என்றும் உன்னைத் துதித்ததுமில்லை
இன்று மனம்திருந்தி உனச்சரண்டைந்தேன்
கன்றுநான் பசு உனைக் கதறியழைத்தேன்
No comments:
Post a Comment