காமாட்சி
பல்லவி
காமாட்சியின் பாதகமலங்களைக்
கனவிலும் மறவேனே - ஶ்ரீ , (அன்னை)
அனுபல்லவி
நாமகளும் பூமகளும் மனமுவந்து தினம் போற்றும்
காமகோட்டம் வளர் கேசவன் சோதரி
சரணம்
நாமமாயிரம் கொண்ட நாராயணி
பூமிநாதன் கொண்டாடும் ஈச்வரி
சாமகானம்தனில் மனம் மயங்கிடும்
சாமுண்டேச்வரி சங்கரி கௌரி
No comments:
Post a Comment