கண்ணன்
பல்லவி
கண்ணன் கழலடி நிழலே போதும்
மண்ணில் எனக்கினி வேறெது வேண்டும்
அனுபல்லவி
விண்ணுறை தேவரும் முனிவரும் பிரமனும்
தண்மதி கதிரவன் அனைவரும் துதித்திடும்
சரணம்
கண்ணன் கேசவனே கலியுகக்கடவுள்
கண்ணன் நாமமே வேதம் அமுதம்
எண்ணமும் செயலும் பாவமும் புண்ணியமும்
கண்ணனின் அருளே அனைத்தும் கண்ணனே
No comments:
Post a Comment