வேங்கடவா
பல்லவி
அன்புடனே என்னை ஆண்டுகொள்ள வேண்டுமென
பன்னகசயனனே கேசவா உனைத் துதித்தேன்
அனுபல்லவி
முன்வினைப் பயன்களால் பவக்கடலில் மூழ்குமெனை
உன்னருள் தந்து உதவிக் கரம் நீட்டி
சரணம்
அறியாத சிறுவயதில் புரியாமல் நான் செய்த
சிறிய பிழைகளெல்லாம் பெரிதாகக்கொள்ளாமல்
வறியவனின் பிழை பொறுத்து திருவடி நிழல் தந்து
கரியவனே வேங்கடவா பரம்பதம் அடைந்திடவே
No comments:
Post a Comment