வாழி ஶ்ரீபத்மநாபா
பல்லவி
வாழி வாழி ஶ்ரீ பத்மநாபா
ஆழ்கடல் நடுவே பள்ளிகொண்டவனே
அனுபல்லவி
வாழ்விலும் தாழ்விலும் துணையிருப்பவனே
ஏழையெனக்கருளும் நாராயணனே
சரணம்
கோடிப்பொன்னும் பொருளும் மாதவா
ஈடாகுமோ உந்தன் கருணைநிதிக்கு
நாடிவந்த என்னை ஆதரவளித்தே
ஓடிவந்து காத்தருள் கேசவா
No comments:
Post a Comment