புவனேஸ்வரி
பல்லவி
புவனேச்வரியுன் பாதம் பணிந்தேன்
புவனமனைத்தையும் படைத்தவளே ஶ்ரீ
அனுபல்லவி
சிவநேசன் கேசவன் சோதரி கௌரி
பவரோகம் தீர்த்தென்னை ஆண்டிட வேண்டியே
சரணம்
அவதாரம் பல எடுத்து அடியாரைக் காப்பவளே
சிவனிடம் கொண்ட மலைமகளே உமையவளே
தவயோக முனிவர்களும் தேடிடும் தூயவளே
சிவசக்தி வடிவாக ஶ்ரீநகரம்தனில் விளங்கும்
No comments:
Post a Comment