மலையப்பன்
பல்லவி
குறைதீர்க்கும் கோவிந்தன் திருப்பாதம் பணிந்தேன்
மறை போற்றும் மலையப்பன் திருவேங்கடமுடையான்
அனுபல்லவி
முறையாகத் துதித்திடும் பக்தருக்கெல்லாம்
கறைபிறவிப் பிணி போக்கும் கடல்வண்ணன் கேசவன்
சரணம்
அறம் தழைக்கும் திருமலையில் கோயில் கொண்டிருக்கும்
சிறப்புமிகு அருளாளன் ஶ்ரீமன் நாராயணன்
உறவினனும் நண்பனும் ஆசானுமவனே
பிற தெய்வமனைத்திற்கும் மேலான இறைவன்
No comments:
Post a Comment