எனக்கொரு குறையுமில்லை
பல்லவி
எனக்கொரு குறையுமில்லை கேசவா
அருகினில் நீ இருக்கையிலே ... ...
அனுபல்லவி
கனவிலும் நினைவிலும் உனது திருநாமம்
மனத்தினில் அனுதினம் துதிப்பதனாலே
சரணம்
வினைப் பயன்களினால் நான்படுந்துயரம்
அனைத்தும் நீங்கிட அருள்தருபவனே
நினைத்ததை அடைந்திடும் நிதியளிப்பவனே
அனந்தபத்மநாபனே திருவடி சரணம்
No comments:
Post a Comment