வானமாமலையனை
பல்லவி
வானமாமலையானை தெய்வநாயகனை
தீனசரண்யனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தேனமாம்பொழில் நிறை மங்கலத்து நாயகி
தானும் மனமுவந்து கரம் பணிந்தேத்தும்
சரணம்
ஊனம் களைந்தென் மன இருள் நீக்கி
ஞானமும் கல்வியும் நன்னெறியறிவும்
நானென்றும் நலமுடன் அடைந்திட வேண்டி
கானமியற்றி திருவடி பணிந்து
No comments:
Post a Comment