ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
பல்லவி
ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
நீயே கதியென நம்பினேன்
அனுபல்லவி
மாலயனரனும் ஏவல் புரிந்திட
ஶ்ரீநகரம்தனில் வீற்றிருப்பவளே
சரணம்
ஆலயம்தோறும் காட்சியளித்திடும்
மூலமந்திரப் பொருளானவளே
ஞாலமனைத்தையும் காத்தருள் தந்திடும்
நீலவண்ணன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment