நீலாம்பரி
பல்லவி
துணைபுரிந்தருள்வாய் நீலாம்பரி
வணங்கியுன் பதம் பணிந்தேன் ஶ்ரீகாமாட்சி
அனுபல்லவி
இணையுனக்காருளார் நித்யகல்யாணி
நீலவண்ணன் கேசவன் சோதரி
துரிதம்
கணங்களும் நந்தியும் அமரரும் போற்றும்
ஏகாம்ரேச்வரர் நாயகி கௌரி
சரணம்
பணம் பெண் போகமெனத் தேடித்திரிந்தேன்
கணக்கிலடங்காத தவறுகள் புரிந்தேன்
குணமறிந்து மனம் வருந்தி தினமுனைத்துதித்தேன்
கணநாதன் தாயே உனையே வேண்டினேன்
No comments:
Post a Comment