பஞ்சவடி கபாலீச்வரன்
பல்லவி
நஞ்சினை நெஞ்சில் வைத்த கபாலீசனை
பஞ்சவடித்தலத்தில் மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தஞ்சமடைந்தோரைக் காத்தருளும் சிவனை
பஞ்நதீசனைப் பரமேச்வரனை
சரணம்
நஞ்சரவம்தனைக் கழுத்திலணிந்த
செஞ்சடாதரனை மருந்தீச்வரனை
அஞ்சேலஞ்சேலென்று அபயகரம் நீட்டும்
அஞ்செழுத்தீசனைக் கேசவன் நேசனை
No comments:
Post a Comment