பார்த்தசாரதியின்
பல்லவி
பார்த்தசாரதியின் பாதகமலங்களை நாளும் சரணடைந்தேன்
வார்த்தையில் சொல்ல முடியாத வடிவழகன் கேசவன் - ஶ்ரீ
அனுபல்லவி
தேர்நடத்திப் பார்த்தனுக்கு துணைபுரிந்த கண்ணனவன்
மார்பணியாய்த் திருமகளை வைத்திருக்கும் திருமார்பன்
சரணம்
நாரதரும் நான்முகனும் நமச்சிவாயனும் நான்மறையும்
சூரியனும் வெண்ணிலவும் தேவர்களும் தினம் துதிக்கும்
பார்புகழும் திரு வேங்கடவனவன் தீனசரண்யன்
நீர்மலையில் நின்றருளும் நீலமுகில்வண்ணன் ( ஶ்ரீ )
தாளம்: சங்கீர்ணத்ருபுடை
No comments:
Post a Comment