மீனலோசனி
பல்லவி
கமலாம்பிகையே காத்தருள்வாயெனை
கமலமலர்ப் பதம் தனயே துதித்தேன்
அனுபல்லவி
இமவான் மகளே மீனலோசனி
சோமசுந்தரர் உடனுறை ராணி
சரணம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
குமரனும் கணபதியும் கரம்பணிந்தேத்தும்
உமையே கௌரி கேசவன் சோதரி
மாமதுரையரசாளும் அங்கயற்கண்ணி
No comments:
Post a Comment