ஶ்ரீ ராமன்
பல்லவி
சீதாலக்ஷ்மணனுடனுறை ராமனை
கோதாவரிக்கரையில் மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
சாதாரணரும் மேதாவிகளும்
நீதான் கதியெனத்தஞ்சமடைந்திடும்
சரணம்
தந்தை சொல்மிக்க மந்திரமில்லையெனும்
தத்துவம் சொன்ன தசரதராமனை
சிந்தையில் வைத்துக் கேசவனவனை
முந்தைய பழவினைப் பயன்தொலைய வேண்டி
No comments:
Post a Comment