திருநறையூர் வஞ்சுளவல்லி
பல்லவி
திருமகளே உந்தன் திருவருள் வேண்டினேன்
பெருமைக்குரிய வஞ்சுளவல்லியெனும்
துரிதம்
அருந்தவ முனிவரும் அருமறை நான்கும்
கலைமகள் மலைமகள் அனைவரும் போற்றும்
அனுபல்லவி
தருமசிந்தையும் சத்தியநெறியும்
பொருள் புகழ் போகமனைத்தையும் அருளென
சரணம்
திருப்பாற்கடலில் அவதரித்தவளே
திருமால் கேசவன் திருமார்பில் வீற்றிருக்கும்
கருணைக்கடலே கற்பகத் தருவே
திருநறையூர் திருத்தலத்தில் எழுந்தருளிக்காட்சிதரும்
No comments:
Post a Comment