வடிவுடை அம்பிகையே
பல்லவி
வடிவுடை அம்பிகையே மரகதவல்லி
அடிமையெனக்கிரங்கி அருள்புரிவாயே
அனுபல்லவி
கொடியிடையாளே கேசவன் சோதரி
அடிமலர் பணிந்துனை ஆராதனை புரிந்தேன்
சரணம்
கொடிய அரக்கர் குலமழித்து அமரருக்கு
விடிவெள்ளியாய் விளங்கும் விரிஞ்சிபுரம் தாயே
அடிமுடி காணா அயனரி தேடிய
ஆடியபாதனிடமமர்ந்தவளே
No comments:
Post a Comment