பகவத் விநாயகன்
பல்லவி
கருணை மாகடலை மகா கணபதியை
இருவினைப் பயன் தொலைய வேண்டுமெனத் துதித்தேன்
அனுபல்லவி
பெருமைக்குரிய பகவத் விநாயகனை
கருமாமுகில் வண்ணன் கேசவன் மருகனை
சரணம்
விருப்பமுடன் பணியும் அடியவர்க்கெல்லாம்
விரும்பும் வரமளிக்கும் முருக சோதரனை
வருமிடர் களைந்திடும் வாரண முகனை
தருமம் தழைத்திடும் குடந்தையில் வீற்றிருக்கும்
No comments:
Post a Comment