கலைவாணி
பல்லவி
வந்தனை புரிந்தேன் கலைவாணி
சந்ததம் உந்தன் அருளைப் பெறவே
அனுபல்லவி
மந்திரப் பொருளே மறைபுகழ்ந்தேத்தும்
சுந்தரி நீயே சுடர்மிகு பாரதி
சரணம்
கந்தனும் கணபதியும் நாரதரும் நான்முகனும்
உந்தி கமலன் கேசவனுமிந்திரனும்
நந்தி வாகனனும் போற்றும்
சந்திர முகத்தாளே சரஸ்வதி தேவி
No comments:
Post a Comment