கரம்பனூர் உத்தமன்
பல்லவி
உருகி மனமார உனையே துதித்தேன்
தருமமோ கேசவா எனை நீ சோதித்தல்
அனுபல்லவி
புருஷோத்தமனே கரம்பனூர் தலத்துறையும்
திருவின் நாயகனே கருணாகரனே
சரணம்
கருணை க்கடலென்றும் கலியுகக் கடவுளென்றும்
பெருமையுடன் பேசும் பேச்சும் பொய்யோ
கருமவினைப் பயனால் யான் படுந்துயர் நீக்கி
திருவுளமிரங்கி ஆண்ட ருள்வாயே
No comments:
Post a Comment