இது நியாயமா
பல்லவி
இது நியாயமா கேசவா -- உனக்கு
அனுபல்லவி
கதிகலங்க வைக்கும் துன்பங்கள் தந்து
மதிமயங்கச் செய்யும் நிலையளித்தாயே
சரணம்
விதியேயென்றாலும் வினைப்பயனென்றாலும்
கதியென்றுன் பதி வந்து துதி செய்யும் பக்தனுக்கு
இதமுடன் அருள் செய்து உதவிகள் புரியாமல்
புதிராக எதிர் நின்று காட்சியளிப்பவனே
No comments:
Post a Comment