காவளம்பாடிக் கண்ணன்
பல்லவி
பாமாலை புனைந்து பாடும் ஏழையெனக்கு
ஏமாற்றம் வேதனை ஏன் கொடுத்தாய் கேசவனே
அனுபல்லவி
பாமா ருக்மிணியுடன் காவளம்பாடியில்
க்ஷேமமாய் வீற்றிருக்கும் கோபால கிருஷ்ணனே
சரணம்
சீமான் செல்வந்தனோ நானில்லையென்று
சாமானியன் என்னை அலட்சியம் செய்தாய்
பூமாலை பொன்மாலை வனமாலையணிந்த
கோமானே மனமிரங்கி எனக்குள் புரிவாய்
No comments:
Post a Comment