மதுசூதனன்
பல்லவி
மனமிரங்கி எனக்கருள இன்னும் என்ன தயக்கம்
உனதிரு பதமே தினம் துதித்தேன் கேசவா
அனுபல்லவி
மனதுக்கினியவனே மதுசூதனனே
தினகரகுலத்தோனே தீன தயாகரனே
சரணம்
அனல் புனல் காற்று ஆகாயம் பூமி
அனைத்தும் நீயே ஆராவமுதனே
அனவரதமுமுன் நாமமே போற்றும்
உனதடிமை மீது கடைக்கண் வைத்து
No comments:
Post a Comment