குஞ்சரமுகன்
பல்லவிகழலடி நிழலே கதியெனத் துதித்தேன்
அழகிய கணபதியே அருள் புரிந்திடுவாய்
அனுபல்லவி
அழலேந்தும் நெற்றிக் கண்ணன் மகனே
குழலூதும் மாயன் கேசவன் மருகனே
சரணம்
முழுநிலவினொரு பிறையை அணிந்திருப்பவனே
தொழுதிடுமடியார் குறை தீர்க்கும் கரிமுகனே
கொழுக்கட்டையை விரும்பும் குஞ்சர முகனே
முழுமுதற் கடவுளே விக்ன விநாயகனே
No comments:
Post a Comment