அத்தி முகன்
பல்லவிசித்தி விநாயகனை புத்தியிலுறைபவனை
சித்தத்திலிருத்தி நித்தமும் துதித்தேன்
அனுபல்லவி
உத்தமிப் புதல்வனை மத்தள வயிற்றனை
வித்தகர் போற்றும் கேசவன் மருகனை
சரணம்
சுத்தி வந்து பெற்றோரே உலகென உணர்த்திய
அத்திமுகப் பெருமானை ஆனைமுகத்தோனை
முத்தமிழ் கலைகளை ரசித்திடும் கரிமுகனை
எத்திசையும் புகழ் விளங்கும் மகா கணபதியை
No comments:
Post a Comment