சரவணன் சோதரன்
பல்லவி
சரணம் சரணம் கணபதியே சரணம்
சரணம் உனதிரு திருவடி சரணம்
அனுபல்லவி
வரம் தரும் கரமும் அபய கரமும் காட்டும்
சரவணன் சோதரனே கேசவன் மருகனே
சரணம்
அரனயனரியும் அமரரும் அருமறையும்
நரர் சுரர் நந்தியும் கணங்களும் பணிந்திடும்
பரம் பொருள் நீயே கருணாகரனே
தருணமிதுவே எனை ஆட்கொள்ளவே
No comments:
Post a Comment