வாட்டாற்றுக் கேசவன்
பல்லவி
கேட்டதும் கேட்டதையளித்திடும் கேசவா - உன்
திருவடி நிழலில் தங்கிடும் வரமருள்வாய்
அனுபல்லவி
வீட்டையடைய விரும்பியே உனைத் துதித்தேன்
வாட்டாற்றில் பள்ளி கொண்ட ஆதிகேசவா
சரணம்
திருமகளுக்கிணையாக திருமார்பிலிடம் வேண்டேன்
கருடனினிடமான வாகனத்தைக் கேட்கவில்லை
அரவணையாய் விளங்கும் அனந்தனிடம் போட்டியில்லை
திருவடியருகினிலோரிடமே வேண்டினேன்
No comments:
Post a Comment