கதறியழைத்தேன்
பல்லவி
கதறியழைத்தேனே காதில் விழவில்லையா
உதவிட உனக்கென் மேல் தயவில்லையா
அனுபல்லவி
பதறித் துடித்திடும் அடிமையெனக்கிரங்க
இதயத்தில் இடமில்லையா கேசவா
சரணம்
சதமுந்தன் பதமென்றே கதியெனக் கிடந்தேன்
நிதமுமுன் நாமமே பாடித் திரிந்தேன்
விதம் விதமாகப் பல அவதாரம் எடுத்தவனே
இதம் தந்தெனையே ஆட்கொள்ள வேண்டுமென
No comments:
Post a Comment