இடர் நீக்கும் கணபதி
பல்லவி
தன்னிகரில்லாத தனிப்பெருந்தேவனை
இன்னலிடர் தீர்க்கும் கணபதியைத் துதித்தேன்
அனுபல்லவி
பொன்னம்பலத்தாடும் ஈசன் திருமகனை
பன்னக சயனன் கேசவன் மருகனை
சரணம்
பின்னிரு கரங்களில் பாசாங்குசமும்
முன்கையில் மோதகமும் வைத்திருக்கும் சுமுகனை
இன்னிசை கலைகளை ரசித்திடும் அய்ங்கரனை
பன்னிருகையன் தமையனை கரிமுகனை
No comments:
Post a Comment