மதுராபுரிக் கண்ணன்
பல்லவிஎதற்கிந்த சோதனை எனக்களித்தாய் கேசவனே
சதமுந்தன் பதமென்று நம்பியே உனைத் துதித்தேன்
அனுபல்லவி
வதம் புரிந்தரக்கர்கள் குலமழித்தவனே
முதலும் முடிவுமில்லாத மாயவனே
சரணம்
யது குலத்துதித்த மதுசூதனனே
மதுராபுரியரசே கண்ணபெருமானே
சதுமறையும் சதுர் முகனும் போற்றும் நாராயணனே
துதித்திடும் உனதடிமை எனைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment