கணநாயகன்
பல்லவி
துணை புரிந்தருள்வாய் கணநாயகா உன்
இணையடி நிழலே என்றுமெந்தன் துணை
அனுபல்லவி
வணங்கிடுமடியார்க்கு நலன்களை அளிப்பதில்
இணையுனக்காருளார் கேசவன் மருகனே
சரணம்
பிணங்கிய குறமகள் வள்ளியை முருகன்
மணந்திட உதவிய விக்ன விநாயகா
கணங்களின் அதிபதியே ஆனைமுகத்தோனே
அணைத்தெனையாண்டருள இதுவே தருணம்
No comments:
Post a Comment