ஆதிமூலம்
பல்லவி
சிரிக்கச்செய்தாலும் அழ வைத்தாலும்
கிரிதரனே கேசவா நீயேயென் துணை
அனுபல்லவி
மரித்தலும் பிறத்தலும் உனதருளாலே
அரி நாராயணனே ஆதிமூலமே
சரணம்
தரித்திரனாய்ச் செய்து நான் படும் பாட்டை
பரிகாசம் செய்வதுன் விளையாட்டா
விரிகமல மலர் தனை நாபியில் வைத்திருக்கும்
பரிபூரணனே பரிந்தருள் புரிவாய்
No comments:
Post a Comment