சென்னகேசவன்
பல்லவி
என்னிடம் சிறிதளவும் கருணை இல்லாததேன்
பன்னக சயனனே சென்னகேசவா
அனுபல்லவி
இன்னல்களளித் தெனைப் பதப்படச் செய்தாய்
அன்னை குந்தியைப் போல் ஆனந்தமே கொண்டேன்
சரணம்
சின்ன வயதில் யான் செய்த பிழைகளோ
முன்வினைப் பயனோ இந்நிலை எய்திட
கன்னலே தேனே உன்னடியே துதித்தேன்
உன்னருள் தந்தெனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment