பாண்டுரங்க விட்டலன்
பல்லவி
உனக்கென் மீதிரக்கம் வராததேன்
பண்டரீ புரத்தரசே பாண்டுரங்க விட்டலா
அனுபல்லவி
உனது திருவடியே சதமெனப் பணிந்தேன்
வனத்திடை தோன்றிய அனந்தனே கேசவா
சரணம்
ஜனன மரண பயம் வாட்டிடும் பொழுது
உனது நாமமே மனமாரத் துதித்தேன்
எனது மனக்கவலை அனைத்தையும் போக்கி
உனதருள் தந்தெனை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment