அருமாகடமுதன்
பல்லவி
திருமாலே கேசவனே நீயே சோதித்தால்
சிறியேன் என் செய்வேன் எவரிடம் செல்வேன்
அனுபல்லவி
திருவடியே கதியென்றுன் தாளினைச் சரணடைந்தேன்
உருகி உன்னாயிரம் திருநாமமே துதித்தேன்
சரணம்
அருமாகடலமுதே கருணாகரனே
திருவுள்ளமிரங்கி என் குறைகள் தீராயோ
கருணைக்கடல் நீயே கருமாமுகில்வண்ணா
பெருமைக்குரிய திருக்கண்ண புரத்தரசே
No comments:
Post a Comment