ஆனைமுகன்
பல்லவி
சங்கீத நாட்டியக் கலைகளை ரசித்திடும்
பங்கயபதத்தானை கணபதியைத் துதித்தேன்
அனுபல்லவி
சங்கடமிடர் களையும் மங்கள மூர்த்தியை
பொங்கரவணிந்த சங்கரன் மைந்தனை
சரணம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
துங்கக் கரிமுகனை கேசவன் மருகனை
அங்குசமும் பாசமும் கரங்களிலேந்திடும்
ஓங்கார வடிவினனை ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment