அங்கையற்கண்ணி
பல்லவி
உன்னையல்லால் வேறே கதியெனக் காருளார்
அன்னையே மீனாக்ஷி எனைக் காத்தருள்வாய்
துரிதம்
நான்முகன் இந்திரன் முனிவர்கள் கணங்கள்
வானுறை தேவர்கள் அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
பொன் மலைதனிலே வீற்றிருப்பவளே
சென்ன கேசவன் சோதரி மாயே
சரணம்
உன்னருள் இல்லையேல் உலகுயிர் நிலைக்குமோ
இன்னமுதளித்திடும் அன்னபூரணி
தென்னாடுடைய சிவன் மனம் கவர்ந்திடும்
அங்கையற்கண்ணி மதுராபுரி ராணி
No comments:
Post a Comment