கார்த்திகேயன் சோதரன்
பல்லவி
மூர்த்தி சிறிதான வடிவுடைய கணபதியை
கீர்த்தியில் சிறந்தவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
வார்த்தையிலடங்காத பேரெழிலழகனை
கார்த்திகேயன் தமையனைக் கரிமுகனை
சரணம்
ஆர்த்தெழுந்த கயமுகனை அழித்தவனை
பார்த்தசாரதி கேசவன் மருகனை
ஊர்த்வ தாண்டவம் ஆடிடும் சிவன் மகனை
பார்த்தவர் பரவசிக்கும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment