படைத்தவன் நீயே
பல்லவி
படைத்தவன் நீயே பரிதவிக்கச் செய்தால்
அடைக்கலம் எவரிடம் அடைவேன் கேசவா
அனுபல்லவி
மடைதிறந்த வெள்ளமென மனக்கவலையளித்து
விடைபெறவியலாத வினாவைத் தொடுத்தாய்
சரணம்
இடைக்குலத்துதித்து அவனியைக்காத்திட
குடைதனைக் குன்றாக ஏந்திய கண்ணனே
தடைகள் நீங்கி என்வாழ்வு நலம் பெற
கடைக்கண் வைத்தெனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment