மணித்வீப கணபதி
பல்லவி
பொங்குமருளோடு மங்களமாய்க் காட்சி தரும்
எங்கும் நிறைந்திருக்கும் கணபதியைத் துதித்தேன்
அனுபல்லவி
மங்காத புகழ் மேவும் மணித்வீபம் தலத்திலங்கும்
சங்கரன் மகனை ஆனைமுகத்தோனை
சரணம்
அங்காரகனும் அனைத்து கோள்களும்
செங்கண்மால் கேசவனும் பிரமனுமரனும்
சிங்காரவேலனும் நந்தி கணங்கள் முனி
புங்கவரும் பணிந்தேத்தும் பங்கய பதத்தானை
No comments:
Post a Comment