சத்தியமூர்த்தி
பல்லவி
சித்தமிரங்காததேனோ கேசவா
நித்தமுன் திருவடி பணிந்திடும் எனக்குன்
அனுபல்லவி
தத்துவமறிந்திலேன் தவமும் புரிந்திலேன்
பக்தியுடன் உந்தன் நாமமே துதித்தேன்
சரணம்
பித்தனும் பிரமனும் நரர்சுரரும் நாரதரும்
வித்தகரும் சுகசனகாதியரும் போற்றும்
உத்தமனே உயர் சத்தியமூர்த்தியே
மெத்தனமேனோ ஏழை யெனக்கருள
No comments:
Post a Comment