நீலவண்ணன்
பல்லவி
என்னைக் கைவிடல் தகுமோ கேசவா
உன்னையே அனுதினம் துதித்திடும் அடிமை
அனுபல்லவி
புன்னை மரத்தடியே குழலூதி நிற்கும்
கன்னலே தேனே கருநீலவண்ணனே
சரணம்
பக்தியில் சிறந்த சபரியையும் விதுரரையும்
உதாரணமாய்க் கொண்டு உனதடி பணிந்தேன்
அன்னையும் தந்தையும் அகிலமனைத்தும்
நீயென நம்பி தொழுதிடும் மெய்யன்பன்
No comments:
Post a Comment