கருணாநிதி
பல்லவி
கருணாநிதியே அருள் மிகு கணபதியே
தருணமிதுவே எனையாண்டருள்வாய்
அனுபல்லவி
வருணிக்க வார்த்தையில்லை உனது பேரழகை
திருமால் கேசவன் மருகா சுமுகா
சரணம்
அறியாது சிறுவயதில் பிழை பல புரிந்தேன்
அருகிலிருந்துமுனை அறியாதிருந்தேன்
திருந்தி மனம் வருந்தி உனதடி பணிந்தேன்
திருவுளமிரங்கி காத்தருள வேண்டினேன்
No comments:
Post a Comment