ஸ்ரீ பெரும்புதூர் கணபதி
பல்லவி
திருப்பெரும் புதூரென்னும் திருத்தலத்தில் கோயில் கொண்ட
அருட்கடலை கணபதியை உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வருமிடர் களைந்திடும் வாரண முகனை
கருநிற வண்ணன் கேசவன் மருகனை
சரணம்
அருகம் பில்லும் எருக்கு மாலையும்
விரும்பி ஏற்றிடும் விக்ன விநாயகனை
உருகும் மெழுகென உள்ளம் கரைந்து
திருவடி சரணமே கதியெனப் பணிந்து
No comments:
Post a Comment