திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன்
பல்லவி
பிழையென்ன செய்தேன் அழகனே கேசவா
சோதனையளித்து வேதனையேன் கொடுத்தாய்
அனுபல்லவி
குழையணிந்த மகர நெடுங்குழைக் காதனே
திருப்பேரை தலத்துறையும் நீலமுகில்வண்ணனே
சரணம்
அழையாத விருந்தாளியாகவே கவலை
நுழைந்தென்றன் உள்ளத்தில் பிணியாகச் சேர்ந்ததே
மழையாகக் கருணை பொழிந்திடும் கேசவா
விரைந்துன்றன் கடைக்கண்ணருள்தந்து காத்தருள்
No comments:
Post a Comment