நந்தி மைந்தன்
பல்லவி
ஞானக் கொழுந்தினை நந்தி மைந்தனை
ஆனைமுகத்தோனை அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
வானுறை தேவரும் முனிவரும் கணங்களும்
பானுவும் நிலவும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
தானெனுமகந்தையை அழித்திடும் கரிமுகனை
சேனைமுதலியென வைணவர் அழைத்திடும்
தானைத்தலைவனை வேழ முகத்தோனை
தீன சரண்யனைக் கேசவன் மருகனை
No comments:
Post a Comment