நாவாய் முகுந்தன்
பல்லவி
நீயே அருள் தர மறுத்தால் கேசவனே
நாயே னுக்கிவ்வுலகில் வேறு புகலேது
அனுபல்லவி
தாயும் தந்தையும் நீயேயன்றோ
சேயெனைக் காப்பதுன்றன் கடனல்லவோ
சரணம்
ஆயர் குலத்துதித்த வேணுகோபாலனே
தேயாத புகழ் மேவும் திருநாவாய் முகுந்தனே
நோயெனும் பவவினையால் யான்படுந்த்துயரங்கள்
மாயமாய் மறைந்திட மலரடி பணிந்தேன்
No comments:
Post a Comment