குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
மலைகளும் ஆகாசமும் பூமியும் குளிர்ச்சியே இயற்கையான நீரும் சந்திரனும் நிலைநின்ற ஸூர்யனும் மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும் தானேயாயிருக்கப்பெற்ற எம்பெருமான் எவ்விடத்திலுள்ளானெனில்; பெரிய வீதிகளும் கழனிகளும் தோட்டங்களும் மாட மாளிகைகளும் ஆகிய எல்லாவிடங்களிலும் தென்றல் காற்றானது பரிமளத்தை வீசிக்கொண்டு ஸஞ்சரிக்கப்பெற்ற நாங்கூர், திருமணிக்கூடத்தான்
திருமணிக்கூடத்து….
பல்லவி
திருமணிக்கூடத்து நாயகனைத்துதித்தேன்
அருள் தரும் கேசவனை அழகிய மாதவன
அனுபல்லவி
பெருமலை ஆகாசம் பூமியுமானவனை
குளிர் நிலவும் சூரியனும் தாரகையுமாய் விளங்கும்
சரணம்
பெரும் மாட மாளிகையும் திருவீதித் தோட்டங்களும்
கழனிகளும் அழகிய வயல் வெளியும் நிறைந்த
திருநாங்கூர் பதி தன்னில் பெருமையுடன் வீற்றிருக்கும்
திருநிறை மார்பனை தீன சரண்யனை
No comments:
Post a Comment